3 ஜூலை, 2010

லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

லண்டன்:விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்தினால் பயணிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இது குறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேவிட் பிரென்னர் கூறியிருப்பதாவது: 'விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட உள்ள முழு உடல் ஸ்கேனிங் கருவிகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்-ரே கதிர்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. சாதாரணக் கருவிகளை விட இந்த வகை ஸ்கேனர்கள் 20 மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தக் கூடியன.

குறிப்பாக குழந்தைகள் இந்த கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவர். ஸ்கேனர்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப கருவியை வடிவமைப்பது நல்லது என்று டெய்லி மெயிலில் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, உலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில் பிரென்னரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ததாக அமைந்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்"

கருத்துரையிடுக