22 ஜூலை, 2010

இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் அரசு எதிர்ப்பு

காந்திநகர்:இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கக் கோரும் மனு கடந்த திங்களன்று (ஜூலை19) குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க குஜராத் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

அரசு சார்பாக ஆஜரான வக்கீல் ஜெனரல் கமால் திரிவேதி, ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கை உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்ததை போல் இஸ்ரத் ஜகான் வழக்கை ஒப்படைப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதாக தெரிவித்தார்.

ஷொராஹ்ப்தீன் மற்றும் இஸ்ரத் ஜகான் என்கவுண்டர் ஒரே போன்றது அல்ல என்று மத்திய அரசின் கருத்தை சுட்டிக் காட்டிய திரிவேதி, இஸ்ரத் ஜஹான் ஒரு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் ஜாவீதிற்கு இவ்விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுவதை தவறு என்றும் திரிவேதி விமர்சித்தார்.

இஸ்ரத்தின் என்கவுண்டரினை போலி என்று கூறியுள்ள தமாங் கமிட்டி அறிக்கையினை சட்டத்திற்கு புறம்பானது என்றும் திரிவேதி சாடினார். எந்த வித அடிப்படையும் இல்லாத தமாங் கமிட்டி அறிக்கையை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.

இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து இன்றும் நடக்கும்.

முஸ்லிம்களின் முன்னேற்றத்தை வலியுறுத்திய சச்சார் கமிட்டியின் அறிக்கையை பி.ஜே.பி. குப்பைத் தொட்டியில் போடக்கூடியது என்று கூறிய பாணியில், தற்போது இஸ்ரத் வழக்கின் தாமங் கமிட்டி அறிக்கையினையும் பி.ஜே.பி. அரசின் சார்பாக வாதாடும் திரிவேதி தெரிவித்துள்ளார்.

ஷொராஹ்ப்தீன் வழக்கினை கையில் எடுத்த சி.பி.ஐ. தற்போது குஜராத் பாதுகாப்பு அமைச்சர் அமர் சிங்கின் கைதுவரை சென்று கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரத்தின் வழக்கில் எங்கு சி.பி.ஐ. நுழைந்து உளவுத்துறைகளின் சதிகளையும் அம்பலப்படுத்திவிடுமோ! என்ற பயத்திலேயேதான், குஜராத் அரசு சி.பி.ஐ. விசாரணையை கடுமையாக எதிர்க்கின்றது.

சி.பி.ஐ. போபியா என்ற கொடிய வியாதி பி.ஜே.பி.யை தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தான், கர்நாடகா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளையும், ஊழல்களையும் சி.பி.ஐ. விசாரிப்பதற்கு பி.ஜே.பி. கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இதன் காரணத்தினாலேயே,சங்க்பரிவார் பயங்கரவாத குடும்பங்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ள Central bureau of investigation என்கிற சி.பி.ஐ.யை. Congress bureau of investigation என்ற மாயையை பி.ஜே.பி. உருவாக்க முயன்று வருகிறது என்பது தான் உண்மை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் அரசு எதிர்ப்பு"

கருத்துரையிடுக