மகாராஷ்டிர மாநிலத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்காக சிறப்பு ஐ.டி.ஐ. வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
சிறுபான்மையின மாணவர்கள் பல்வேறு தொழில் பயிற்சிகள் பெற்று முன்னேற ஏதுவாக இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அந்த மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நசீம் கான் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 1-ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 44 ஐ.டி.ஐ. களில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.
சிறுபான்மையின மாணவர்கள் தொழில் பயிற்சி பெறுவதற்காகவே ரூ. 5 கோடி செலவில் மும்பை புற நகர்ப் பகுதியில் அவர்களுக்கென 2 தனி ஐ.டி.ஐ. கள் கட்டப்படுவதாக நசீம் கான் கூறினார்.
மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் 40 இடங்களை சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒதுக்கவும் அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

1 கருத்துகள்: on "மகாராஷ்டிராவில் சிறுபான்மையினருக்கு சிறப்பு ஐ.டி.ஐ. வகுப்புகள்"
இன்னுமும் இவர்கள் முஸ்லீம்களை பணியாலர்கலாகவோ அல்லது தொழிலாலர்கலாகவோ வைக்கவே விரும்புகின்றனர். ஏன் பி.இ அல்லது எம்.பி.பி.எச்சில் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படவில்லை? நம் சமுதாயம் இனியாவது விழிக்குமா? முன்னாள் உள்ள தடைகளை தகர்த் தெரியுமா?
கருத்துரையிடுக