7 ஜூலை, 2010

சேலத்தில் சிக்கியது வெடிமருந்துக் குவியல்

சேலம்:சேலத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட், வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் பியூஸ் வயர்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் சிவதாபுரம் பகுதியில் ஒரு சேகோ தொழில்சாலையில் ரகசியமாக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சேலம் கோட்டாட்சியர் குழந்தைவேலுவுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவர் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஜான் நிக்கல்சனுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் படையுடன் சென்ற இருவரும் சிவதாபுரம் பிரதான சாலையில் உள்ள அய்யாவு சேகோ தொழில்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வெடிபொருள்கள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் வேதிப் பொருள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த ஒரு அறையில் வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் பியூஸ் வயர்கள் ஏராளமாக இருந்தது. இதையடுத்து, அங்கு 119 மூட்டைகளில் இருந்த சுமார் 6 டன் அம்மோனியம் நைட்ரேட், 6 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள பியூஸ் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸôர் வருவதைக் கண்டதும் அங்கு வேலை செய்து வந்த சுப்பிரமணியன் (50) தப்பி ஓடிவிட்டார். அவரது மனைவி சின்னத்தங்கம் (45) பிடிபட்டார். அவரிடம் போலீஸôர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஜான் நிக்கல்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

முருகன் என்பவருக்குச் சொந்தமான இந்த சேகோ தொழில்சாலையை அரூர் ஒடசல்பட்டியைச் சேர்ந்த சுருளிராஜன் (35), தங்கராஜ் இருவரும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதில், தங்கராஜ் சேகோ ஆலை நடத்தி வருகிறார். ஆனால், சுருளிராஜன், அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பெற்று அதில் மேலும் சில வேதிப் பொருள்களைக் கலந்து மஞ்சள் நிறத்தில் வெல்லக் கட்டிகள் போன்று தயாரித்துள்ளார்.

பின்னர் அதை உடைத்துத் தூளாக்கி மூட்டைகளில் அடைத்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இது தொடர்பாக சுருளிராஜனை தேடி வருகிறோம் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சேலத்தில் சிக்கியது வெடிமருந்துக் குவியல்"

கருத்துரையிடுக