சென்னை:பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசி வந்தால் தயவு செய்து விடுமுறை விடாதீர்கள். குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு எங்களுக்குத் தகவல் கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது.இதுபோன்ற மிரட்டல்களை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே விடுக்கின்றனர் என்பது விசாரணையின்போது தெரிய வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர்கள் அதன் தீவிரத்தன்மை தெரியாமல் ஈடுபடுகின்றனர்.
எனவே பள்ளிக்கூடங்களுக்கு தொலைபேசி மூலம் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தால் பள்ளி நிர்வாகிகள் உடனடியாக விடுமுறை விடக் கூடாது. மாறாக, திறந்த வெளி இடத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு, எங்களுக்குத் தகவல் கொடுங்கள்.
வெறுமனே விடுமுறைக்காகவே இதுபோன்ற மிரட்டல்கள விடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இதன்மூலம் அடியோடு ஒழியும் என்றார் ஜாங்கிட்.

0 கருத்துகள்: on "பள்ளிகளுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்தால் லீவு விடாதீர்கள்-கமிஷனர் அறிவுரை"
கருத்துரையிடுக