7 ஜூலை, 2010

ஷார்ஜா அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் மிகப்பெரும் தீவிபத்து

ஷார்ஜா:ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் ரோலா என்ற இடத்தின் அருகே அல்-புதினா பகுதி உள்ளது.இங்குள்ள அல்குவைத்தி என்ற 15 அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது. காலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் புகை மூட்டத்தால் கண் விழித்தனர். தீப்பிடித்ததை அறிந்ததும் பதட்டம் மற்றும் பரபரப்புடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் தீ வேகமாக பரவியது. இதில் 12 மாடிகள் எரிந்து நாசமானது.

அங்கிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் 80 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அவர்கள், பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

தீ விபத்தில் பலர் மாடிகளில் சிக்கி கொண்டனர்.அவர்களை தீயணைப்பு படையினர் ஏணிகள் மூலம் காப்பாற்றினர்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜா அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் மிகப்பெரும் தீவிபத்து"

கருத்துரையிடுக