
சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஈரானை நோக்கிய ரஷ்யாவின் நிலைப்பாட்டில் அதிக மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் அதிக அழிவுமிக்க அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் யுரேனிய செறிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெத்ததேவ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.
மேலும் ஈரான் தங்களது வர்த்தகப் பங்காளராக இருப்பினும் அணுவாயுத தயாரிப்புக்கான அதன் யுரேனிய செறிவாக்கல் திட்டம் தொடர்பாக தாம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக மெத்ததேவ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையினால் கொண்டுவரப்பட்ட ஈரானின் அணுவாயு திட்டத்திற்கெதிரான நான்கு கட்ட தடைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து ஈரான்-ரஷ்யா உறவில் முறுகல்நிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்"
கருத்துரையிடுக