மும்பை,ஜுலை29:'இயற்பியல் ஒலிம்பிக்' என்ற சர்வதேச இயற்பியல் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிர்களுக்கு தீர்வு கண்டு பிடிப்பதே போட்டியின் முக்கிய அம்சமாகும். இதில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம்.
இந்த அண்டு இயற்பியல் ஒலிம்பிக் போட்டி குரோசியா நாட்டில் நடந்தது. 82 நாடுகளைச் சேர்ந்த 376 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மும்பை மாணவி அகான்ஷா தங்க பதக்கம் பெற்று உள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இயற்பியல் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை.
இந்த போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் ஆகியவையும் கிடைத்தன.
அசான்ஷா இந்த ஆண்டு தான் பிளஸ்-2 முடித்தார். ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் அவர் இந்தியாவில் 18-வது இடத்தை பிடித்தார்.
ஆனாலும் அவர் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேரவில்லை. அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் சேர போவதாக அறிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: on "'சர்வதேச இயற்பியல் ஒலிம்பிக் போட்டி': இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்"
கருத்துரையிடுக