29 ஜூலை, 2010

போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்! கஷ்மீரில் மீண்டும் பதட்டம்

ஜுலை29:கஷ்மீரில் போலீஸ் கஸ்டடியில் ஓர் இளைஞர் கொல்லப்பட்டதையடுத்து மீண்டும் பதட்டம் நிலவுகிறது.

கண்டனங்களும்,ஆர்ப்பாட்டங்களூம் நடந்து இப்பொழுது தான் ஓய்ந்திருந்தது கஷ்மீர். ஆனால் அமைதிக்கு வழியில்லாமல் மீண்டும் பதட்டம் நிலவுகிறது.

தாரிக் தார் என்ற இளைஞர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சார்ந்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த வாரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது நடந்தது கஷ்மீரில் வடமாவட்டமான பாராமுல்லாவில்.

கடந்த ஞாயிறு அன்று அந்த இளைஞரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போலீஸ், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியது.

அந்த இளைஞரது சொந்த ஊரான ரஃபியாபாத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்! கொலையாளிகளுக்கு தண்டனை கொடு!" போன்ற முழக்கங்கள் விண்னை முட்டின.

"அவனுக்கும் லஷ்கருக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அவன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான்" என்று அந்த இளைஞரது உறவினர்கள் கூறினர்.

இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில அமைச்சர் ஜாவித் அஹமத் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்! கஷ்மீரில் மீண்டும் பதட்டம்"

RAJA சொன்னது…

காவல் துறையினரும் , இராணுவப் படையினரும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் அடக்கு முறைகளை கையாண்டும் காஸ்மீரில் அமைதியை கொண்டு வந்துவிடலாம் என்பது மிகப் பெரிய தீவிரவாதமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காமல் அவர்களை கொன்று குவிப்பது எப்போதும் அமைதியை கொண்டு வராது. இந்திய அரசு தீவிரவாதப் போக்கை கைவிட வேண்டும் இல்லையேல் அது அப்பாவி மக்களை தீவிர வாதிகளாகவே உருவாக்கும்

கருத்துரையிடுக