அகமதாபாத்,ஜுலை29:"எனக்கு தெரியாது எனக்கு ஞாபகம் இல்லை" என்பதே சிபிஐ ன் விசாரணையில் முன்னாள் குஜராத் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித் ஷாவின் பதிலாக உள்ளது.
மூன்று நபர்கள் அடங்கிய சிபிஐ விசாரணைக்குழு சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் சதி தொடர்பாக அமித் ஷாவின் பங்கு குறித்து சபர்மதி சிறைச்சாலையில் விசாரணை மேற்கொண்டது.
சிபிஐ விசாரணைக்குழு இவ்வழக்குத் தொடர்பாக 32 கேள்விகளை தொகுத்து விசாரணை மேற்கொண்டது. ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் பொதுவான பதிலையே கூறி அமித் ஷா மழுப்பி வருகிறார்.
அமித் ஷாவின் இந்த முரண்டு செய்யும் நடவடிக்கை சிபிஐ விசாரணைக்கு பயனளிக்காத வழியில் எமாற்றம் அளித்ததால் விசாரணையை இடையிலேயே விட்டு விட்டு சிறைச்சாலையிலிருந்து விசாரணைக்குழு வெளியேறியது.
சிபிஐ-ன் இந்த விசாரணை சிபிஐ உயர்மட்டத் தலைவரான அமிதாப் தாகூரின் மேற்பார்வையில் நடந்தது. மேலும் மற்றொரு குழுவின் மூலம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படும் என செய்தி வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 28 லிருந்து ஜூலை 30 வரை அமித் ஷாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது. புதன் கிழமை காலை 10.40 லிருந்து 2.30 மணி வரை சிபிஐ அமித் ஷாவிடம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் அமித் ஷா எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
அமித் ஷாவிடம் சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் மற்றும் கெளசர் பீவியின் கொலை சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் அமித் ஷா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என கூறிவிட்டார்.
சிபிஐ யினால் இந்தக் கேள்விகளுக்கு அமித் ஷாவிடமிருந்து பதிலைப் பெற முடியவில்லை. கேட்கப்பட்ட 32 கேள்விகளும் சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் சதியில் அமித் ஷாவின் பங்கு குறித்தும் அவருக்கு ராஜஸ்தான் காவல்துறையுடன் உள்ள தொடபு சம்பந்தமாகவும் கேட்கப்பட்டன.
ஜூலை 23ல் நீதிமன்றத்தில் கொலை,கொலைக்கான சதிவேலைகள், ஆட்கடத்தல், சாட்சிகளை அச்சுறுத்தல் மற்றும் அழித்தல் ஆகிய பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொஹ்ராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை மூன்று IPS அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக குற்றப் பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொஹ்ராபுதீன் குற்றவாளியால் அச்சுறுத்தப்பட்டார். மேலும் சாட்சிகளிடம் பயத்தினை உண்டாக்க அவர் தீர்த்துக்கட்டப்பட்டார் என்றும் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் சிபிஐ மேலும் சில கேள்விகளுடன் அமித் ஷாவிடம் விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஷா இந்த போலி என்கவுண்டர் சதியையும் அதனை செயல்படுத்தியதையும் சிபிஐ-ன் விசாரணை முடிவு கொண்டுவருமா என்பதும் புதிராகவே உள்ளது.

0 கருத்துகள்: on "சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு: சிபிஐ யுடன் ஒத்துழைக்க அமித் ஷா மறுப்பு"
கருத்துரையிடுக