14 ஜூலை, 2010

ஒரு பகுதியில் நடந்த சம்பவம் - மாநிலம் முழுவதும் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை! பாப்புலர் ஃபிரண்ட்

கேரளாவில் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தின் பேரில் ஒட்டு மொத்த மாநிலம் முழுவதும் "பயங்கரவாத பயத்தை" உண்டுபண்ணும் முகமாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை பாப்புலர் ஃபிரண்ட் கண்டித்துள்ளது.

இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும் என்று பாப்புலர் ஃபிரண்டின் கேரள மாநிலத் தலைவர் நஸ்ருத்தீன் எளமரம் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறினார்.

"பேராசிரியரைத் தாக்கியது மாதிரி பல சம்பவங்கள் கேரளாவில் நடந்துள்ளன. ஆனால் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தை வைத்து மாநிலத் தலைமையகம், அனைத்து மாவட்ட அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகள், ஆகியவை பரிசோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது யதார்த்தமாக நடந்ததல்ல. இதன் பின்னால் பலத்த சதி உண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக சமூகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்று இயங்கி வரும் ஓர் இயக்கத்தை தகர்ப்பதற்கு முயற்சிப்பவர்கள் இங்கே உள்ளார்கள்.

மாநிலத்தில் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தை காரணம் காட்டி இந்த சக்திகளெல்லாம் ஒன்று திரண்டிருக்கின்றன. ஒரு சம்பவம் நடந்தால் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவதற்கும், சட்ட ஒழுங்கு அங்கே நிலைநிற்பதற்கும், பாடுபடும் அமைப்புதான் பாப்புலர் ஃபிரண்ட்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் சக்திகளைத் திரட்டிக் கொண்டு உயர்ந்து வரும் ஒவ்வொரு அமைப்பையும் தேர்ந்தெடுத்து அதனை இல்லாமல் செய்யப்படும் முயற்சிதான் இப்பொழுது நடப்பது".
இவ்வாறு நஸ்ருத்தீன் எளமரம் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேரள பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது. கே.எச். நாஸர், அப்துர் ரஹ்மான் பாகவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒரு பகுதியில் நடந்த சம்பவம் - மாநிலம் முழுவதும் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை! பாப்புலர் ஃபிரண்ட்"

கருத்துரையிடுக