14 ஜூலை, 2010

வேலூர் கோட்டைப் பள்ளிவாசலை தகர்க்க சதி? தக்க நேரத்தில் முறியடிப்பு

வேலூர் கோட்டைக்குள் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என மூன்று வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இது சமய நல்லிணக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் அடையாளமாகத் திகழ்கிறது. அங்குள்ள கோயிலில் இந்து சகோதரர்களும், தேவாலயத்தில் கிறித்துவ சகோதரர்களும் வழிபாடு நடத்துகின்றனர். இதே போல் பள்ளிவாசலில் தாங்களும் வழிபட வேண்டும் என முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரி வருகிறார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு சுல்தானின் வாரிசுகளின் தலைமையில் 1806 ல் வேலூர் புரட்சி நடைபெற்றபோது, இப்பள்ளிவாசல் இந்திய விடுதலையின் களமாக திகழ்ந்தது.

இந்த பள்ளிவாசலை மீட்டு, தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வேலூர் பகுதி முஸ்லிம்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் 9.05.2008 அன்று வேலூர் கோட்டையை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முற்றுகை நடத்தி, கோட்டை வாசலில் ஜும்ஆ தொழுகையை நடத்தினர்.

அதன் பிறகு இவ்விவகாரத்தில் தீர்வு காண பல்வேறு களங்களிலும், தளங்களிலும் சட்டரீ தியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஜூலை 3, 2010 அன்று மதியம் ஒரு தகவல் வந்தது. அந்த பள்ளிவாசலைச் சுற்றி, குழி தோண்டப்படுவதாகவும், உடனே விரைந்து வருமாறு கூற அப்பகுதி முஸ்லிம்களும் தமுமுக மாவட்டத் தலைவர் எஜாஸ் உட்பட தமுமுக வினர் பெரும் திரளாக திரண்டனர்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கோடு,அஸ்திவாரத்தைச் சுற்றி புதைக்கப்பட்ட கருங்கற்களை,அரசு உத்தரவின் பேரில் சிலர் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தனர்.

உடனே மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆகியோரிடம் எஜாஸ் புகார் செய்தார். உடனடியாக காவல் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரி பலராமன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

த.மு.மு.கவினரின் வேண்டுகோளை ஏற்று, அஸ்திவாரத்தை தோண்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஜூலை 8 அன்று, கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.- அதில் தோண்டப்பட்ட குழி மூடப் படாவிட்டால், சட்டம் & ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 7 அன்று தமுமுக தலைமையகத்துக்கு வந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார்கள். ஜூலை 9-க்குள் பள்ளிவாசலைச் சுற்றி தோண்டிய குழி மூடப்படா விட்டால், நாங்களே மூடுவோம் என தமுமுக தரப்பில் கூறப்பட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் பள்ளிவாசலைச் சுற்றி தோண்டப்பட்ட குழிகளை விரை ந்து மூடிவிட்டனர். இதன் மூலம் பள்ளிவாசல் இறையருளால் காப்பாற்றப்பட்டு விட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வேலூர் கோட்டைப் பள்ளிவாசலை தகர்க்க சதி? தக்க நேரத்தில் முறியடிப்பு"

கருத்துரையிடுக