7 ஜூலை, 2010

குஜராத்:தங்களது சாட்சியத்தை தலைமை நீதிபதியிடம் அளிக்க விரும்பும் குல்பர்க் இனப்படுகொலை சாட்சிகள்

அஹ்மதாபாத்:குஜராத் நீதிமன்றத்தில் நடந்துவரும் குல்பர்க் சொசைட்டி இனப்படுகொலை வழக்கிற்கான நீதிபதி பி.யு.ஜோஷி உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று குல்பர்க் சாட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சாட்சியாளர் இம்தியாஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், நீதிபதி ஜோஷி குற்றவாளிகளுடன் நெருக்கத்துடனும், சிறந்த பண்புடனும் நடந்துக் கொள்வதாகவும், ஆனால் சாட்சியாளர்களையோ, அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தையோ மதிக்காமல் கண்டும் காணாமல் விட்டுவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சில சமயங்களில்,சாட்சிகள் சாட்சி கூறும்போது அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வதாகவும், பல சமயங்களில் கோபம் அடைந்து சாட்சிகளை திட்டுவதாகவும் அவர் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

வழக்கின் விசாரணை நடக்கும் வேளையிலேயே நீதிமதி குற்றவாளிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கும் நிலையில், இந்நீதிபதி மூலம் தங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்றும் விவரித்துள்ளார்.

முன்னதாக,இம்மனுவை ஏற்க மறுத்த நீதிபதி ஐ.பி.ஷா குஜராத் உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார்.

தற்போது,இம்மனு நீதிபதி அகில் குரேஷி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,நீதிபதி ஜோஷியின் இந்நடவடிக்கையை ஏற்கமுடியாதது என்று கூறி,இவ்விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்படி மனுதாரை அவர் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 28, 2002, குஜராத் இனப்படுகொலையின் போது, குல்பர்க் நகரில் நடந்த கொடுமைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிழந்தனர்,பலநூறு மக்கள் படுகாயமடைந்தனர். சொத்துக்கள், வீடுகள், கடைகள் என அனைத்தும் சூறையாடப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக சுமார் 65 குற்றவாளிகளின் மேல் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
TOI

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்:தங்களது சாட்சியத்தை தலைமை நீதிபதியிடம் அளிக்க விரும்பும் குல்பர்க் இனப்படுகொலை சாட்சிகள்"

கருத்துரையிடுக