7 ஜூலை, 2010

'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி

பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது.இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.

இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி"

கருத்துரையிடுக