8 ஜூலை, 2010

ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு நிறுவனங்களுக்கு யு.எஸ். நிறுவனம் லஞ்சம்

வாஷிங்டன் கருவிகள் உள்ளிட்ட உதிரிப்பாகங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக 'பெல்' உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசுத் துறை நிறுவனங்களுக்கு அமெரிக்க கம்பெனி ஒன்று லஞ்சம் கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செயல்படும் வால்வ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 'டூல்ஸ்' சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளித்த லஞ்சப்பட்டியல்,அமெரிக்க நீதித்துறை சார்பில், அந்நாட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் பாரத் மிகுமின் நிறுவனம் (பெல்), மகாராஷ்ட்ரா மின்வாரியம், ஹரியானா மின்வாரியம், தேசிய அனல் மின் நிலையம் மற்றும் பிலாய் எலெக்ட்ரிக் உள்ளிட்ட இந்தியாவின் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், மேற்கூறிய நிறுவனங்களின் பெயர்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மூடி முத்திரையிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கூறிய இந்திய நிறுவனங்கள் தவிர சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களின் பெயர்களும் லஞ்சம் வாங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு நிறுவனங்களுக்கு யு.எஸ். நிறுவனம் லஞ்சம்"

கருத்துரையிடுக