8 ஜூலை, 2010

மாவோயிஸ்ட் பாண்டே என்கவுண்டர் குறித்து விசாரிக்க ஆந்திர அமைச்சர் உறுதி

கடந்த 2ம் தேதி போலீசாருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட் பீரோ உறுப்பினர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் ஹேமசந்திர பாண்டே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தன்னுடைய கணவர் மாவோயிஸ்ட் என்று கருதி போலீசார் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாண்டேயின் மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆந்திர பிரதேச உள்துறை அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டி உறுதி அளித்தார்.

மாவோயிஸ்ட் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசாத் மற்றும் ஹேமசந்திர பாண்டே ஆகியோர் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் என்று கூறியுள்ளனர். ஆனால், தன்னுடைய கணவர் மாவோயிஸ்ட் இல்லை என்றும் பத்திரிகையாளர் என்றும் பாண்டேயின் மனைவி பாபிடா கூறுகிறார். எனவே உண்மையை அறிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி கூறினார்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிஸ்ட் பாண்டே என்கவுண்டர் குறித்து விசாரிக்க ஆந்திர அமைச்சர் உறுதி"

கருத்துரையிடுக