10 ஜூலை, 2010

பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை நிராகரிப்பு

பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்ததன் காரணமாக மொராக்காவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மொராக்காவைச் சேர்ந்த இந்த இளைஞர் கடந்த 1999ம் ஆண்டு முதல் பிரான்சில் வசித்து வருகிறார்.இவர் 2004ம் ஆண்டு பிரெஞ்சுப் பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

பிரெஞ்சு தேசிய நீரோட்டத்துடன் கலக்க மறுத்துவிட்டதாகவும், பெண்களுடன் பாரபட்ச போக்கை மேற்கொண்டதாகவும் இவரைப் பற்றி பிரெஞ்சு அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு குடியேற்ற அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தன்னுடைய மதத்திற்கு எதிரானது என்பதால் அரசு அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடைய மனைவி முழு நீள அங்கி அணிந்திருந்ததாகவும், பெண்கள் மட்டும் உள்ள தனி அறையில் மட்டுமே தன்னுடைய ஆடையை களைய முன்வந்ததாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை நிராகரிப்பு"

கருத்துரையிடுக