ஆஃப்கனிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தாலிபான்களை ஈடுபடுத்த ஆஃப்கானிஸ்தான் அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஆஃப்கானிஸ்தான் அரசின் அமைதி மற்றும் ஒற்றுமைத் திட்டங்கள் ஆயுதம் ஏந்திய அரசுக்கு எதிரானவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது.
ஆயுதம் ஏந்திய போராளிகள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்களாகவும் ஆஃப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்களாகவும் அமைதியான ஆஃப்கானிஸ்தானைக் கட்டியெழுப்ப அரசுடன் இணைந்து செயலாற்ற விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஆஃப்கானிஸ்தானில் கூடியுள்ள சர்வதேசத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் வரைவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தாலிபான்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி நடவடிக்கையில் இணைந்து செயல்பட வருமாறு தாலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

1 கருத்துகள்: on "ஆஃப்கன் அமைதி நடவடிக்கையில் தாலிபான்களை ஈடுபடுத்த உலக நாடுகள் ஆதரவு!"
இது அமேரிக்காவின் தோல்வியை மறைபதற்கான நடவடிக்கையே அன்றி வேறில்லை
கருத்துரையிடுக