20 ஜூலை, 2010

காங்கிரஸ் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் மோடி

அஹமதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீஹாரில் மாயாவதிக்கு எதிராக முலாயம்சிங்,தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதி போல,அரசியல் வஞ்சத்தை தீர்க்கும் ஒரு சகாப்தத்தை மோடி உருவாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதிலும்,சிபிஐ மூலம் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்யும் அரசியல் சூனியம் தான் இது என்று நரேந்திர மோடி அரசு வர்ணிக்கிறது. மேலும் குஜராத் அரசு எதிர்த்து தாக்குதல் தொடுக்க இலக்குகளை அடையாளம் கண்டுள்ளது.

குஜராத் போலீஸ் விரைவில் பழைய பகையை வைத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் என காந்திநகரில் இருந்து வரும் செய்திகள் உறுதியாக கூறுகிறது.

பதிலுக்கு பதில் செய்வதற்காக பழைய வழக்குகள் எல்லாம் தோண்டப்படுகின்றது. அமித்ஷாவுடன் உடன்படாத மோடி அவையின் மந்திரிகள், அவரை காக்க மோடி இவ்வளவு தூரம் விரும்புவதைக் கண்டு வியக்கின்றனர்.

இது ஒரு 'அரசியல் சதி' என்று கூறிக் கொண்டிருந்த மோடியை "இப்பொழுது அமித்ஷா என்றால், அடுத்த இலக்கு நீங்களாகத்தான் இருக்கும், அப்போது பீஹாரில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் என்று அவரை நம்பவைத்துவிட்டனர்." என்று ஒரு அமைச்சர் கூறினார்.

கண்ணுக்கு பதில் கண் என்பதே இந்த அரசியலில் மையக்கருத்து. காங்கிரஸில் மட்டும் அல்ல பாஜகவிலும் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, மோடி அரசு திறனைக் காட்டியிருக்கிறது.

முன்னால் பாஜக பொதுச் செயலாளர் சஞ்சை ஜோஷியின் பணியை மூழ்கடித்த, பாலியல் சிடி குற்றச்சாட்டு, படமாக்கப்பட்டு வெளியிட்டதும், ஷொராஹ்ப்தீனை கொன்றதும் ஒரே போலீஸ் அமைப்புதான் என்பதற்கான ஆதாரம் சிபிஐயிடம் உள்ளதாக ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காங்கிரஸ் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் மோடி"

கருத்துரையிடுக