கஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கஷ்மீர் மாநிலம் சோப்பூரில் ஊரடங்கு உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கடந்த மாதம் 27ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், பிலால் என்ற இளைஞர் பலியானார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது.
பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிலால் பலியானது குறித்து ராதாகன்ட திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மறுப்பதாகவும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிலால் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் புகாரில் திரிபாதி தெரிவித்தார்.
இந்த புகார் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சோப்பூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சக செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கத் தவறினால் ஆணையம் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "கஷ்மீர்:துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்"
கருத்துரையிடுக