வெள்ளை மாளிகைக்கு கோபமூட்டும் விதமாக அதிபர் ஒபாமாவையும், மூத்த அமெரிக்க அதிகாரிகளையும் கண்டித்துப் பேசியதால் ஆப்கானிஸ்தானின் அமெரிக்க மூத்த அதிகாரியான தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் அமெரிக்க படையிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மெக் கிறிஸ்டல் ஓய்வு பெற விரும்புவதாக இராணுவத்திடம் தெரிவித்தார். இன்னும் முறையாக கடிதம் கொடுக்கவில்லை, அதனால் அவருடைய ஓய்வு பற்றி தெளிவாக சொல்லமுடியாது என்று இராணுவப் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
'ரோல்லிங் ஸ்டோன்' என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரையில் பிரதமரையும் மற்ற அதிகாரிகளையும் கண்டித்து எழுதியிருந்தார் மெக் கிறிஸ்டல். ஒபாமா அதைக்கண்டு கடுங்கோபம் கொண்டதாகவும் இதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இவரின் பதவிநீக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற அதிகாரிகளின் ஒற்றுமையை பாதுகாக்கும் என்றும் கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் மெக் கிறிஸ்டலுக்கு பதிலாக டேவிட் பெட்ரேயஸை அதிபர் பரிந்துரைத்தார். டேவிட் பெட்ரியாஸ் நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பெட்ரியாஸ் நியமனம் உறுதியானது.
0 கருத்துகள்: on "அமெரிக்க இராணுவத்தை விட்டு விலகும் மெக் கிறிஸ்டல்"
கருத்துரையிடுக