அஹமதாபாத்:2002 குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கான இழப்பீட்டிற்கான தொகை 87.75 கோடி ரூபாய்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை குஜராத் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு இதற்குண்டான பட்ஜெட்டை குஜராத் உயர்நீதி மன்றத்தில் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளையும், பொருட்களையும் இழந்தவர்களுக்கு உண்டான நிவாரண நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக விநியோகம் செய்யவும் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த இழப்பீடுகள் ஏற்கனவே மாநில அரசாங்கம் எடுத்த கணக்கெடுப்பின்படி தீர்மானிக்கப்பட்டுள்ளவையாகும்.
ஆனால், ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின் கூடுதலாக தற்போது புதியதாக 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களில் பட்டியலில் இணைந்துள்ளது. இதில் 752 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்க வேண்டும் எனவும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
கடைசியாக நடந்த கோர்ட் விவாதங்களின் போது இந்த தகவலை குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.மேலும் இதற்கான பதிலையும் நிவாரணத்தையும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இதற்கிடையில், மத்திய அரசாங்கம் குஜராத் இனக்கலவரத்தில் கொலைச் செய்யப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்குண்டான சாத்தியக்கூறுகளை மாநில அரசாங்கத்திடம் விசாரணை செய்திருந்தது.
இதற்கு பதிலளித்த மோடி அரசாங்கம் இப்படி ஒரு திட்டம் ஏற்படுத்துவதற்குண்டான எந்த வாய்ப்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் அமித் பஞ்சால் குறிப்பிடும்போது இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட எவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என குற்றும் சாட்டியிருக்கிறார்.
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முகோபாத்யா மற்றும் தாக்கர் இருவரும் மத்திய மாநில அரசுகள் இதுக் குறித்த பதிலை வரும் செப்டம்பர் 27 அன்று தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறார்கள். அன்று தான் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசாங்கம் ஏற்கனவே 262.44 கோடி ரூபாய்களை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது. ஆனால், மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் நிவாரணம் விநியோகம் காலதாமதமாகி கடந்த வருடம் உயர்நீதிமன்றம் தலையிட்டு நிவாரணத்தை வழங்கியது.
காகன் சேத்தி என்பவர் 2008-ல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்படி மத்திய அரசு அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த மாநில அரசாங்கம் மத்திய அரசு அறிவித்த நிதியில் வெறும் 19 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருப்பதாக பதிலளித்திருந்தது.
இதன்பிறகே உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து மீதமுள்ள மொத்த தொகையையும் உடனே அனுப்பித்தர கேட்டிருந்தது.
தற்போது மாநில அரசு,'இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவருக்கும் மற்றும் இருப்பிடங்களை துறந்து வெளியேறியவர்களுக்கும் நிவாரணத்தை வழங்க ஏற்பாடுகளை செய்து வருவதாகவும். மேலும் தொழில்நுட்ப குளறுபடிகளால் தாமதமாவதாகவும்' குறிப்பிட்டுள்ளது.
TOI
0 கருத்துகள்: on "'கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை துரிதப்படுத்து' - மத்திய அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு"
கருத்துரையிடுக