2 ஜூலை, 2010

'நேட்டோ' படைகளுடன் பேச்சுவார்த்தை இல்லை - தாலிபான்

ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள "நேட்டோ" படையினருடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்போவதில்லை என்று தாலிபான் அறிவித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க படைகளுக்கு உத்வியாக "நேட்டோ" படைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று "நேட்டோ" படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் இராணுவ தலைமை தளபதி டேவிட் ரிச்சர்டும், அமெரிக்க இராணுவ கட்டளை தளபதிகளும் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், "நேட்டோ" படையுடன் தாங்கள் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்போவதில்லை என்றும், அதற்கான அவசியம் ஏதும் இல்லை என்றும் தாலிபான் இயக்கத்தின் பேச்சாளர் ஜபிலுல்லா முஜாஹித் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம்.எங்கள் கை ஓக்கியிருக்கும்போது நாங்கள் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?

ஆஃப்கானிலிருந்து அன்னியப் படைகள் வெளியேறும் வரை அதிபர் கர்சாய் அல்லது எந்த ஒரு வெளிநாட்டவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்" என அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "'நேட்டோ' படைகளுடன் பேச்சுவார்த்தை இல்லை - தாலிபான்"

பெயரில்லா சொன்னது…

keep it up in our mujahiteens (nasrum minallahi va fathhun karib)

கருத்துரையிடுக