கஷ்மீர் போராட்டத்திற்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக குற்றம் சாற்றியுள்ள பா.ஜனதா, இது தொடர்பான அனைத்து குழப்பங்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு அவர்களை ஒடுக்க மத்திய அரசு கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் யுக்தியை வகுப்பதில் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐமுகூ அரசு குழப்பத்திலும், எப்படி செயல்படுவது என்று தெரியாமலும் இருப்பதாக தெரிகிறது என்றார்.
காஷ்மீர் கலவரத்தில் பாதுகாப்பு படையினர் மீதான கல்வீச்சு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது.
லோடு ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ. 1,200 வரை விலையுள்ள கற்கள், லாரிகளில் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டுள்ளன.கல் வீச்சில் ஈடுபட்ட பையன்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.
செலவு குறைந்த, அதே சமயம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய யுக்தியை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் பிரிவினைவாத தலைவர்களும் கற்கள் எங்கு வீசப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்துள்ளனர். இந்த கல்வீச்சு சம்பவத்திற்காக ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எனவே நிலைமைக்கு தகுந்தபடி முடிவெடுக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று ஜாவேத்கர் மேலும் கூறினார்.

1 கருத்துகள்: on "கஷ்மீர் மக்கள் போராட்டத்தின் மீது கடுமையான நடவடிக்கை தேவை என பாஜக வலியுறுத்தல்"
hey ediot javetkor you know every action should be reaction every time you think affence only in your side we are muslims mind it
கருத்துரையிடுக