
மஸ்ஜிதுடன் தொடர்புடைய கலாச்சார அமைப்பு ஒன்று போராளிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டி தைய்யிபா என்ற மஸ்ஜிதை நேற்று காலையில் 20 போலீசார் பரிசோதனை நடத்தினர்.
அமைப்பை அரசு தடை செய்துள்ளது.இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஃபார் உஸ்பெகிஸ்தான் உறுப்பினர்கள் தாக்குதலுக்கு செல்லும் முன்பு தய்யிபா மஸ்ஜிதில் ஒன்றுகூடினர் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குத்ஸ் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் தய்யிபா மஸ்ஜித் செண்ட் ஜார்ஜ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மஸ்ஜித் செப்.11 தாக்குதலுக்கு பிறகு கண்காணிக்கப்பட்டு வந்தது.
செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் ஹம்பர்க்கை மையமாகக்கொண்டு செயல்படும் அல்காயிதா போராளிகள் உள்ளனர் என அமெரிக்கா கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்பு எனக்கூறி ஜெர்மனியில் மஸ்ஜிதுக்கு பூட்டு"
கருத்துரையிடுக