10 ஆக., 2010

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த ஆர்வம்: பாகிஸ்தான்

புதுடெல்லி,ஆக,10:வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், இந்தியாவுடனான உறவை மேம்படுத்த ஆர்வப்படுவதில் இன்னும் அதிகமாக பயணிக்க தயார் என பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை பரிபூரணமான முறையில் அமையவேண்டும் எனக்கூறிய குரைஷி,கஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தையில் உபயோகப்படுத்தா விட்டால் பயன்தராது எனவும் கூறினார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த மின்னஞ்சல் வழி நேர்முகத்தில் இதனை தெரிவித்தார் குரைஷி.

எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதுக் குறித்து கூற இயலாது. ஆனால், இரு நாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைமைக்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வமுள்ளது. இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர செய்ய பேச்சுவார்த்தைதான் ஒரே வழி.பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனைகள் வைப்பது நல்லதல்ல.

இந்தியாவைப் போலவே,பாகிஸ்தானிலும் மக்களின் விருப்பங்களை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.இதனை இரு நாடுகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகள் மீதும் அமெரிக்காவின் நிர்பந்தம் உள்ளது என்பதுக் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் குரைஷி.

எஸ்.எம்.கிருஷ்ணா மீது தமக்கு பெரும் மதிப்புள்ளதாக தெரிவித்தார் குரைஷி. இருத்தலைவர்களும் கடந்த ஜூலை 15 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜி.கே.பிள்ளையின் விமர்சனத்திற்கு பதிலளித்து பேசிய குரைஷியின் கூற்று விவாதத்தை கிளப்பியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவுடனான உறவை மேம்படுத்த ஆர்வம்: பாகிஸ்தான்"

கருத்துரையிடுக