10 ஆக., 2010

கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கக் கூடாது: ராஜ்நாத் சிங்

பாட்னா,௦௦௦௦ஆக,10:கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாட்னாவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்."காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனம் மற்றும் உறுதியின்மையே கஷ்மீரில் இப்போது நிலவும் குழப்பத்துக்கு காரணம்.மேலும் கஷ்மீருக்கு சுயஅதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபோல் ராணுவ பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்." என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கக் கூடாது: ராஜ்நாத் சிங்"

கருத்துரையிடுக