13 ஆக., 2010

இந்தியாவில் மேலும் 14 அணு உலைகள் அமைக்கப்படும்

தூத்துக்குடி,ஆக,13:இந்தியாவில் மேலும் 14 அணு உலைகள் அமைக்கப்பட உளேளதாக அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே ஜெயின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் தற்போது 19 அணு உலைகள் உள்ளன. 11வது ஐந்தாண்டு திட்டம் 2012ல் நிறைவு பெறுகிறது. இந்த திட்டப்படி இந்தியாவில் 4 அணு உலைகள் புதிகாக அமைக்கப்பட உள்ளது.

இதில் கூடன்குளம் 3, 4 அணு உலைகளுக்கான உபகரணங்கள் 80 சதவீதம் இந்திய தயாரிப்பாகும். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கூடன்குளத்தில் 5, 6 ஆகிய அணு உலைகளும், ஹரியாணாவில் பத்தியாபாத், மத்திய பிரதேசத்தில் சட்டா ஆகிய இடங்களில் தலா 2 அணு உலைகளும், மேலும் 4 அணு உலைகளுமாக 10 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.

இதில் அமெரிக்கா, ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா 4 அணு உலைகளும், 2 அணு உலைகள் பிரான்சு நாட்டு உதவியுடனும் அமைக்கப்படும். ஹரியானா, மத்திய பிரதேசத்தில் அமைக்கப்படும் 4 அணு உலைகளும் தலா 700 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படும். இது முற்றிலும் இந்திய தொழில் நுட்பமாகும்.

அணுசக்தி கழகத்தின் நிதி தேவை பட்ஜெட்டின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. கூடுதல் நிதி தேவைக்காக தற்போது தேசிய அனல்மின் கழகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தேசிய அலுமினிய கம்பெனி ஆகியவற்றுடன் ஓப்பந்தம் செய்துள்ளோம் என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவில் மேலும் 14 அணு உலைகள் அமைக்கப்படும்"

கருத்துரையிடுக