ஆக,13:சீனாவில் உள்ள திபெத் மற்றும் சென்சு பகுதியில் பெய்த பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்தனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. முதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி விட்டது.இதுவரை 1117 பேர் உடல்கள் மீட்டுள்ளனர். இன்னும் 627 பேரை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலச்சரிவு பாதித்த பகுதியில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது.
எனவே மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: on "சீனா:நிலச்சரிவில் 1117 பேர் பலி"
கருத்துரையிடுக