ப்ரஸ்ஸல்ஸ்,ஆக,14:ஆண்டிபயாட்டிக் மருந்துக்களால் தடுக்க முடியாத என்.டி.எம்-1 பாக்டீரியாவால் ஏற்பட்ட நோயினால் ஒருவர் மரணித்ததாக பெல்ஜியத்தின் ஆஸ்வப் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பு பாகிஸ்தானில் வைத்து விபத்தில் சிக்கிய இவருக்கு அங்குவைத்துதான் பாக்டீரியாவால் ஏற்பட்ட நோய் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.என்.டி.எம்-1 பாக்டீரியாவால் ஏற்பட்ட முதல் மரணமாகும் இது.
விபத்தில் இவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் அவர் பாகிஸ்தானில் சிகிட்சைப் பெற்றிருந்தார். தொடர்ந்து ப்ரஸ்ஸல்சுக்கு வந்த இவர் கடந்த ஜூன் மாதம் ஆஸ்வப் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்திருந்தார். மரணத்திற்கு காரணம் என்.டி.எம்-1 பாக்டீரியா என டாக்டர் டனிஸ் பீராட் தெரிவிக்கிறார்.
இதற்கிடையே, இந்தியாவிற்குச் சென்று திரும்பிய 3 பேருக்கு என்.டி.எம்-1 பாக்டீரியாவின் பாதிப்பை கண்டறிந்துள்ளதாக் ஆஸ்திரேலியா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மும்பையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி முடிந்த நபரும் இதில் அடங்குவார் என கான்பெர்ரா மருத்துவமனை டாக்டர் பீட்டர் கொல்லிக்னன் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "என்.டி.எம்-1 பாக்டீரியா: பெல்ஜியத்தில் ஒருவர் மரணம்"
கருத்துரையிடுக