ஜெருசலம்,ஆக,14:இந்த ஆண்டு ரமலானின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுகைக்காக அதிகமான ஃபலஸ்தீன் மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து இஸ்ரேலிய ராணுவம் மஸ்ஜிதை சுற்றி வளைத்தது.
2000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மஸ்ஜிதை சுற்றிலும் நிறுத்தப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் எல்லா ரமலானிலும் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் அதிகமாக அக்ஸாவிற்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்த்து மஸ்ஜிதில் நுழைய கட்டுப்பாடு ஏற்படுத்துவது உண்டு. 15 வயதிற்கும் 50 வயதிற்குமிடையேயுள்ளவர்கள் ஜெருசலமில் பரிசோதனைக்குப் பிறகே நுழையமுடியும் என போலீஸ் அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு ரமலானில் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மஸ்ஜிதுல் அக்ஸாவை சுற்றிவளைத்த இஸ்ரேலிய ராணுவம்"
கருத்துரையிடுக