30 ஆக., 2010

வரி ஏய்ப்பை காட்டிக் கொடுத்தால் 20 சதவீதம் கமிஷன்

டெல்லி,ஆக30:மத்திய அரசுக்கு சுங்கவரி, கலால்வரி, சேவை வரி போன்றவற்றின் மூலம் பெருமளவு வருமானம் கிடைக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் செலவினங்களுக்கான தொகையில் பெரும் பங்கை இந்த வரிகள்தான் சரிகட்டுகின்றன.

ஆனால் இதில் ஏராளமானோர் உரிய வரியை செலுத்தாமல் ஏமாற்றி விடுகின்றனர்.இதனால் மத்திய அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இப்படி வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளது. ரகசியமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலமும் வரி ஏய்ப்பவர்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில் ஒரு பகுதியை கமிஷனாக கொடுக்கின்றனர். இதேபோல வரி ஏய்ப்பு பற்றி யார் தகவல் கொடுத்தாலும் அவர்களுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.

இந்த கமிஷன் தொகையை உயர்த்த இப்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கமிஷன் தொகையை உயர்த்தினால் வரிஏய்ப்பு தொடர்பான தகவல்களை அதிகம் பேர் தெரிவிப்பார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிக வரிவசூல் கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

எனவே வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

சுங்கவரி, கலால் வரி, சேவை வரி ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரி ஏய்ப்பை காட்டிக் கொடுத்தால் 20 சதவீதம் கமிஷன்"

கருத்துரையிடுக