வாரங்கல்,ஆக30:ஆந்திர மாநிலத்தில் சட்ட மேல்படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு கடந்த 24-ந்தேதி நடந்தது. வாரங்கல்லில் உள்ள காகதீய பல்கலை கழக அரசினர் கல்லூரி மையத் திலும் தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் ஆந்திராவில் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் சிலரும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக தேர்வு எழுதினார்கள்.
அங்கு பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினார்கள். அப்போது தேர்வில் காப்பியடித்த 5 நீதிபதிகள் பிடிபட்டனர். அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய முதன்மை சிவில் நீதிபதி எம்.ஏ.ரசாக் மற்றும் அவரது மனைவியும் வாரங்கல் சட்ட சேவை ஆணைய செயலாளருமான பிரேம் ராஜேஸ்வரியும் காப்பியடித்தது தெரியவந்துள்ளது. அவர்களும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: on "சட்ட மேல்படிப்புத் தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: மேலும் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக