பாக்தாத்,ஆக9:கடந்த சனிக்கிழமையும், நேற்றும் ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் 51 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு ஈராக்கின் பஸரா நகரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 43 பேர் கொல்லப்பட்டனர்.கண்ணிவெடித்தாக்குதல் இப்பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தாக்குதலில் இரண்டு கார் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.185 பேருக்கு காயமேற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், பாக்தாத் கிழக்கு நகரான ரமாதியில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். மக்கள் நிதியுதவி பெறுவதற்காக வரிசையில் நிற்கும்பொழுது குண்டுவெடித்ததாக பத்திரிகைகள் கூறுகின்றன.
இந்த மாதம் இறுதியில் ஈராக்கிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற தயாராகிக் கொண்டுவரும் வேளையில்தான் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஈராக்கில் ஏறத்தாழ அமைதி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றுக்கூறித்தான் அமெரிக்க வாபஸ் பெற தயாராகி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளிடமிருந்து கிடைத்துவரும் பதிலடியால் நிலைகுலைந்துள்ள சூழலில் அங்கு கூடுதல் கவனம் செலுத்துவதற்குத்தான் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதாக கூறப்படுகிறது.
ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அரசு அமைவதில் ஏற்பட்ட ஸ்திரமற்றத்தன்மை ஈராக் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 51 பேர் படுகொலை"
கருத்துரையிடுக