9 ஆக., 2010

காமன்வெல்த் போட்டி ஊழல்: எலிசபெத் ராணிக்கு கோபம்

லண்டன்,ஆக9:டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டித் தொடர்பான ஊழல் விவகாரத்தில் தனது அரண்மனையும் இழுக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனின் ராணியான எலிசபெத் கோபமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன்(தீப்பந்தம்) ஒப்படைப்பு நிகழ்ச்சியில் வாகனங்கள் வாடகைக்கு எடுக்க பிரிட்டீஷ் நிறுவனம் 25 ஆயிரம் பவுண்ட் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரிட்டனின் வருமானவரித்துறையும், இந்தியாவின் விஜிலென்ஸ் பிரிவும் இதைக்குறித்து விசாரணை நடத்திவருகின்றன.

இந்த ஊழல் குறித்த செய்தியை எலிசபெத் ராணிக்கு கோபமூட்டும் வகையில் செய்தி வெளியிட்டது ஸண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் போட்டி ஊழல்: எலிசபெத் ராணிக்கு கோபம்"

கருத்துரையிடுக