9 ஆக., 2010

திப்பு சுல்தானின் அதிகாரச் சின்னம் ஏலம்

லண்டன்,ஆக9:மைசூரின் சுல்தான் திப்புவின் சிம்மாசனத்தில் அதிகாரச் சின்னமாக பதிக்கப்பட்டிருந்த சிறுத்தையின் தலைவடிவச் சின்னம் ஏலத்திற்கு விடப்படுகிறது.

வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி பொன்ஹாம்ஸ் நிறுவனம் லண்டனில் இச்சின்னத்தை ஏலத்திற்கு விடுகிறது.

ரத்தினங்கள் பதித்த சிறுத்தையின் தலைவடிவச் சின்னம் ஒரு ஸ்காட்லாந்து குடும்பத்தின் வசமிருந்தது. லண்டனில் ஒரு வங்கியின் கைவசமிருந்த இன்னொரு சிறுத்தையின் தலை வடிவிலான சின்னம் கடந்த ஆண்டு 389600 பவுண்டிற்கு ஏலம் விடப்பட்டது.

திப்புவின் சிறுத்தைத் தலை வடிவிலான சின்னத்துடன் ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் நேரடிசாட்சியின் தகவல்களும் ஏலத்திற்கு விடப்படுகிறது.

திப்புவின் உடலில் நான்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஒன்று, வலது காதிற்கு மேல்பகுதியில் என்று பெஞ்சமின் ஸிடன்ஹாம் என்பவர் தயாராக்கிய நேரடிசாட்சி அறிக்கையில் குறிப்பிடுகிறார். மேலும் பெரிய கண்களும், சிறிய புருவங்களையும் கொண்ட திப்புசுல்தான் ஐந்தடி எட்டு இஞ்ச் உயரமுடையவராகயிருந்தார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1799 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்டு பிரிட்டீஷார் மைசூரை கைப்பற்றிய பிறகு திப்புவின் சிம்மாசன அலங்காரங்களெல்லாம் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "திப்பு சுல்தானின் அதிகாரச் சின்னம் ஏலம்"

கருத்துரையிடுக