புதுடெல்லி,ஆக9:இந்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை ஜமாஅத்துத் தஃவா தலைவர் ஹாஃபிஸ் ஸய்யதுடன் ஒப்பீடுச் செய்ததை நியாயப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி.ஜி.கே.பிள்ளையின் விமர்சனங்களை நியாயப்படுத்த முடியாது, அது எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான தனது பேச்சுவார்த்தையின் சூழலை கெடுத்ததாகவும் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த மின்னஞ்சல் செய்தியில் குரைஷி கூறியுள்ளார்.
ஜி.கே.பிள்ளையின் விமர்சனம் தேவையற்றதும்,காலத்திற்கு பொருந்தாதுமாகும் என குரைஷி குற்றஞ்சாட்டுகிறார்.
மும்பை தாக்குதலில் துவக்கம் முதல் இறுதி வரை தலைமையேற்றது பாக். உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ என்று ஜி.கே. பிள்ளை கூறியிருந்தார். இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்பு நடத்திய இந்த விமர்சனம் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. ஜி.கே.பிள்ளையையும், ஹாஃபிஸ் ஸயீதையும் ஒப்பீடுச் செய்ததை பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டித்திருந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல இந்திய அரசியல் கட்சிகள் குரைஷியின் கூற்றிற்கு கண்டனம் தெரிவித்திருந்தன. மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஹாஃபிஸ் ஸயீத்தான் காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், குரைஷியோ தனது கூற்று பாரபட்சமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
"இரு நாடுகளும் நல்லுறவு பேணுவதை விரும்பாதவர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ளதாகவும், இவர்களுடைய கடுமையான விமர்சனங்கள் நட்புறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் குரைஷி குறிப்பிட்டுள்ளார்.
"ஜி.கே.பிள்ளை அவசரகதியில் விமர்சனம் செய்துள்ளார் என்பதை இந்திய செய்தி ஊடகங்களும் ஒப்புக்கொண்டன. இதனை எஸ்.எம்.கிருஷ்ணாவும் ஒப்புக்கொண்டார்." என குரைஷி நினைவுக்கூறினார்.
"பைத்தியக்காரத்தனமான இத்தகைய விமர்சனங்களிலிருந்து அகலவேண்டும் என்பதை இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. நாம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வோம்.எல்லா விவகாரங்களையும் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என திம்புவில் வைத்து இந்தியா சம்மதித்ததற்கு மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஜனநாயக நாடுகள் என்ற நிலையில் நமக்கு பொதுமக்களிடம் பொறுப்புகள் உள்ளன. உண்மையில் என்ன நடந்தது? என்பதுக் குறித்து அறிய மக்களுக்கு உரிமை உண்டு." இவ்வாறு குரைஷி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜி.கே.பிள்ளைக்கெதிரான விமர்சனம்: நியாயப்படுத்துகிறார் குரைஷி"
கருத்துரையிடுக