8 ஆக., 2010

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது ஷூ வீச்சு

பர்மிங்காம்,ஆக8:இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஷூ வீசியவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஆவர்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்து நிற்கும் நிலையில்அவர்களுக்குரிய நிவாரணப் பணிகளை பாகிஸ்தான் அரசு செய்யாததைக் கண்டித்து இந்த ஷூ வீச்சு நடந்தது.

பாகிஸ்தானில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார் சர்தாரி. இது பாகிஸ்தானில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பர்மிங்காம் வந்த சர்தாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு 3000க்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்கள் கூடினர். சர்தாரிக்கு எதிராக கோஷமிட்டனர்.

'பாகிஸ்தான் மூழ்கிக் கொண்டிருக்கும்போது சர்தாரிக்கு இங்கிலாந்தில் ஜாலியா' என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.

அப்போது அங்கு சர்தாரி வந்தபோது அவரை நோக்கி ஒருவர் ஷூவை தூக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை. அருகே போய் வீழ்ந்தது. இதையடுத்து அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இங்கிலாந்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது ஷூ வீச்சு"

கருத்துரையிடுக