ஐ.நா.ஆக8:மே 31ம் தேதி காஸ்ஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜாப்ரி பால்மர் இருப்பார். துணைத் தலைவராக முன்னாள் கொலம்பிய அதிபர் அல்வரோ யுரைப் இருப்பார் என்று பான் கி மூன் முன்பு அறிவித்திருந்தார்.
தற்போது இக்குழுவின் இதர இரு உறுப்பினர்களை பான் கி மூன் அறிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் இஸ்ரேலியர், இன்னொருவர் துருக்கி நாட்டவர்.
இதுகுறித்து மூன் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல் தரப்பில் ஜோசப் சியசோனவர் இடம் பெறுவார். அதேபோல துருக்கி தரப்பில் ஆஸ்டம் சேன்பர்க் உறுப்பினராக இடம் பெறுவார். இருவரும் பொது வாழ்வில் மிகப் பெரிய பெயரைப் பெற்றுள்ளவர்கள் ஆவர் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: on "துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்- விசாரிக்க ஐ.நா. குழு"
கருத்துரையிடுக