ரியாத்,ஆக3:சவூதி அரேபியாவில் பிளாக்பெர்ரி(BlackBerry) செல்போனில் குறுந்தகவல் மற்றும் இமெயில் அனுப்ப தடை செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு தொலைத் தொடர்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.தடைக்கான காரணம் குறித்து அவர் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்சிலும்,பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாக்பெரி போனில் குறுந்தகவல் அனுப்ப வரும் அக்டோபர் மாதம் முதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "பிளாக்பெர்ரி(BlackBerry) செல்போனில் குறுந்தகவல் அனுப்ப சவூதியில் தடை"
கருத்துரையிடுக