3 ஆக., 2010

மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஒரு எண்ணைக் கசிவு

ஆக.3:பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின்(BP) எண்ணைக் கிணறு விபத்துக்குள்ளானதை அடுத்து லூசியாவின் கடற்கரை பகுதி ஏற்கெனவே நாசமடைந்ததுள்ளது.

இந்நிலையில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் எண்ணைக் கிணறு விபத்துக்குள்ளாகி அமெரிக்காவின் வரலாற்றில் சுற்றுப்புற சூழலை நெருக்கடி நிலைக்கு கொண்டு வந்த 100 நாட்களுக்குப் பின் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஒரு எண்ணை கசிவு ஏற்ப்பட்டுள்ளது.

பராடரிய பே பகுதியில் செயலற்ற நிலையில் இருந்த பெரிய எண்ணைக் கிணறு ஒன்றின் மீது செவ்வாய்க் கிழமை காலை நீராவி படகு ஓன்று மோதி விபதுக்குளானதால் இந்த புதிய எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் கொத்தாக எண்ணையும் இயற்கை வாயும் சேர்ந்து சுமார் 100 அடி உயரத்திற்கு பீறிட்டு அடித்தன. கசிவான எண்ணை இரண்டு மைல் சுற்றளவுக்கு பரவியது,

எண்ணைக் கசிவை நிறுத்த அவசரகால மீட்புக் குழு துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எண்ணைக் கசிவு ஏற்பட்ட அந்த பகுதிக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்களையும் தடுப்பதற்காக இரண்டு மைல் சுற்றளவில் மீட்புக் குழுக்கள் நிலை கொண்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க பதுகாப்பு படையின் தலைவர் அட்மிரல் தாத் ஆலன் "கிடைக்கும் வாய்ப்புகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி மீட்புக் குழுக்கள் செயல்படுகின்றன, தேவையான படகுகளும் மற்றும் எண்ணைக் கசிவின் பாதிப்பைக் குறைக்கும் இயந்திரங்களும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளன". என்று கூறினார்.

சிடிகோ கார்பரேசன்(Cedyco Corporation) என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த எண்ணைக் கிணறு 2008ம் ஆண்டிலிருந்து செயல் படாத நிலையில் உள்ளது.

முன்னதாக மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஆழ்கடல் எண்ணை எடுக்கும் ரிக் திடீரென வெடித்து விபதுக்குள்ளனத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். எண்ணைக் கசிவு ஏற்பட்டு 3 மாதங்களுக்கு பின் எண்ணைக் கசிவைக் குறைக்கும் மூடி தாற்காலிகமாக எண்ணைக் கிணறின் மீது பொருத்தப்பட்டுள்ளது.

இது இந்தப் பகுதியில் நடைபெற்ற மூன்றாவது எண்ணைக் கசிவு ஆகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஒரு எண்ணைக் கசிவு"

கருத்துரையிடுக