3 ஆக., 2010

ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்: யெச்சூரி

புதுடெல்லி,ஆக,3:வளர்ந்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்களைப் பற்றி எச்சரிக்கை தேவை என்றும் அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று யெச்சூரி கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியான மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதா ராம் யெச்சூரி "இவர்களுக்கு எதிராக அரசு மற்றும் பாதுகாப்புத் துறைகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்கள் பற்றி சவ்தார் காஸ்மி நினைவு அமைப்பு ஏற்ப்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கூறினார்.

"ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களுடன் ஆர்.எஸ்.எஸ்க்கு உண்டான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் பேசுகையில் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.

"தீவிரவாதத்தை நாம் அணுகும் முறையைக் கை விட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. எந்தத் தீவிர செயலானும் அது இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது" என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவிற்கு எதிரான இத்தகைய மத உணர்ச்சி துவேச தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நாம் ஒரு கருத்தாய்வு கொண்ட அரசியல் செயல் முறைகளை அணுக வேண்டும்.

மேலும் தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்தின் அடிப்படைக் கொள்கைகளோடும் கூடியது அல்ல. ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தினை பயன்படுத்துகின்றனர்." என்றும் அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்: யெச்சூரி"

கருத்துரையிடுக