26 ஆக., 2010

அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக ஆதாரமில்லை: கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிக்கையை திருத்திய போலீஸ்

பெங்களூர்,ஆக26:சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்புடன் பி.டி.பி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியை தொடர்புப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என திட்டமிட்ட கர்நாடகா பா.ஜ.க அரசுக்கு துவக்கத்திலேயே ஏமாற்றம் மிஞ்சியுள்ளது.

ஸ்டேடிய குண்டுவெடிப்பில் மஃதனிக்கு தொடர்புள்ளதாக எவ்வித ஆதாரமும் இதுவரைக் கிடைக்கவில்லை என உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று தெளிவாக்கியதுடன் மஃதனியை முன்னிறுத்தி தேசிய அளவில் பா.ஜ.க திட்டமிட்ட பிரச்சாரத்திட்டங்கள் தவிடு பொடியாகின.

பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ஷங்கர் பிதரி, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மஃதனியை கைதுச் செய்த க்ரைம்ப்ராஞ்ச் டி.எஸ்.பி ஓம்காரய்யா ஆகியோர்தான் கர்நாடக உள்துறை அமைச்சர் நேற்று முன் தினம் அளித்த பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் இதனை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சின்னசுவாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பில் இதுவரை மஃதனிக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என ஷங்கர் பிதரி தெரிவித்தார். பின்னர் பி.டி.ஐ செய்தியாளருடன் கூறவே, இதுவரை எவ்வித ஆதாரமும் புலனாய்வில் மஃதனிக்கு எதிராக கிடைக்கவில்லை என விளக்கமளித்தார்.

அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யாவின் கூற்று போலீஸ் ரிப்போர்டின் படி அல்ல எனக்கூறினார் அவர். ஆனால், அமைச்சரின் அறிக்கையைக் குறித்து கூடுதலாக பதிலளிக்க மறுத்துவிட்டார் கமிஷனர்.

சின்னசுவாமி ஸ்டேடியக் குண்டுவெடிப்பில் மஃதனிக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என டி.எஸ்.பி ஓம்காரய்யா மஃதனியின் வழக்கறிஞர் பி.உஸ்மானிடம் தெரிவித்துள்ளார். வழக்குடன் தொடர்புடைய விசாரணையை மஃதனியிடம் மேற்கொள்ளவில்லை என ஓம்காரய்யா கூறியதாக உஸ்மான் தேஜஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதேவேளையில் சின்னசுவாமி ஸ்டேடிய குண்டுவெடிப்புடன் மஃதனியை தொடர்புப்படுத்தி கர்நாடகாவின் உள்துறை அமைச்சரும், தென்னிந்தியாவின் மூத்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான டாக்டர் வி.எஸ்.ஆச்சார்யா நேற்று முன் தினம் பேட்டியளித்ததன் மர்மம் நீடிக்கிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக ஆதாரமில்லை: கர்நாடக உள்துறை அமைச்சரின் அறிக்கையை திருத்திய போலீஸ்"

கருத்துரையிடுக