26 ஆக., 2010

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 50 பேர் படுகொலை

பாக்தாத்,ஆக26:ஈராக்கின் 13 நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

15 பேர் கொல்லப்படக் காரணமான தாக்குதல் உள்பட பாக்தாதில் மட்டும் ஏராளமான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. கூட் பகுதியில் நடந்த போராளிகள் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

கிர்குக்கில் ஒருவர் கொல்லப்பட்டார். பஸ்ரா,ரமதா, கர்பலா, ஃபலூஜா ஆகிய நகரங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ராணுவம் பரிபூரணமாக ஈராக்கை விட்டு வெளியேறும் என்ற அறிக்கைக்கு இடையேதான் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

பாக்தாதில் வடகிழக்கு நகரத்தில் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 58 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பெரும்பாலோர் போலீஸ்காரர்கள். நகரத்தின் மத்தியிலிலுள்ள முதானா விமானதள சாலையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் நான்குபேர் கொல்லப்பட்டு ஐந்துபேருக்கு காயம் ஏற்பட்டது. ஹைஃபா தெரு, கர்ராதா, அஹ்மதியா ஆகிய இடங்களில் நடந்த இதர மூன்று குண்டுவெடிப்புகளில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. கூட் என்றபகுதியிலும் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடந்தது. இங்கு 15 பேர் கொல்லப்பட்டு 84 பேருக்கு காயம் ஏற்பட்டது. கிர்குக்கில் கார்க்குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பஸ்ராவில் போலீஸ் சோதனையின் பொழுது கார்க்குண்டு வெடித்தது. இங்கு ஒருவர் கொல்லப்பட்டார். எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டது. ரமதாவிலு, கர்பலாவிலும் நடந்த கார் குண்டுவெடிப்புகளில் இரண்டுபேர் கொல்லப்பட்டு 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஃபலூஜாவிலும், திக்ரித்திலும், மசூலிலும் ஒருவர் வீதம் கொல்லப்பட்டனர்.

திட்டமிடப்பட்டு ஒருங்கிணைந்து நடந்த இத்தாக்குதல்களின் பொறுப்பை எவரும் ஏற்கவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 50 பேர் படுகொலை"

கருத்துரையிடுக