26 ஆக., 2010

ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு தாலிபான் வலுப்பெற்றுள்ளதை காட்டுகிறது: அமெரிக்க ஜெனரல்

வாஷிங்டன்,ஆக26:ஆஃப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறப்படும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிவிப்பு தாலிபான் ஆப்கானில் சக்திப் பெற்றிருப்பதைக் காட்டுவதாக மூத்த அமெரிக்க ஜெனரல் கூறியுள்ளார்.

கப்பற்படையின் தலைவர் ஜெனரல் ஜேம்ஸ் கோண்வே என்பவர்தான் இவ்வாறு கூறியுள்ளார். தெற்கு ஆப்கானிஸ்தானில் வருடக்கணக்கில் அமெரிக்க ராணுவத்தினருக்கு முகாமிட நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011 ஜூலையில் ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கைக்கு ஊக்கமூட்டுகிறது ஜெனரலின் கூற்று.

சமீபக் காலங்களில் எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை என அவர் ஹெல்மந்த், காந்தஹார் ஆகிய மாகாணங்களை மேற்கோள்காட்டி கூறியுள்ளார்.

ஆஃப்கானின் இதர இடங்களில் வெற்றிப்பெற்றாலும் கூட தாலிபானின் பிறப்பிடமான தெற்கு ஆப்கானில் சிரமம் தான் என அவர் கருத்துத் தெரிவித்தார். பெண்டகனின் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றும்பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

ஒபாமா வருகிற டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போரைக் குறித்து மீளாய்வுச் செய்வார் என வெள்ளை மாளிகை நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.

அதிபர் தயாராக்கிய திட்டப்படிதான் போர் தற்பொழுது முன்னெடுத்துச் செல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஜாண் ப்ரண்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு தாலிபான் வலுப்பெற்றுள்ளதை காட்டுகிறது: அமெரிக்க ஜெனரல்"

கருத்துரையிடுக