டெல்அவீவ்,ஆக26:அரசு பள்ளிகளில் அரபு மொழியை கட்டாயமாக்க இஸ்ரேல் திட்டம் தயாரித்துள்ளது.
வடக்கு இஸ்ரேலில் 170 பள்ளிக்கூடங்களில் நடைமுறைப்படுத்த துவங்கியுள்ள இத்திட்டம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து துவங்கும்.
'யா-ஸலாம்' என்ற பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் அரபிகளுக்கும், யூதர்களுக்குமிடையே கலாச்சார உறவை அதிகரிப்பதற்கு என கல்வித்துறை கூறுகிறது.
தற்பொழுது அரபு மாணவர்களுக்கு ஹீப்ரு பாடம் கட்டாயம் என்றாலும், யூத மாணவர்களுக்கு அரபி மொழியை மேலதிக மொழியாக தேர்ந்தெடுப்பதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு அரபுமொழியுடனான விருப்பம் அதிகரித்து வருவதால்தான் தேசிய கல்வித்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது 1000 அரபு மொழி ஆசிரியர்களைக் கொண்ட இஸ்ரேலில் பெரும்பாலானோர் யூதர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் பள்ளிக்கூடங்களில் அரபு மொழி கட்டாயம்"
கருத்துரையிடுக