26 ஆக., 2010

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை

புதுடெல்லி,ஆக26:இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர்.எஸ்.எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமுறையின் ஆர்வமின்மையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் தலைமை. இதற்கான ‘ஜாக்ரன்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை துவக்க ஆர்.எஸ்.எஸ் ஆலோசித்து வருகிறது. முடியுமென்றால், இந்த மாதத்திலேயே இப்பிரச்சாரத்தை துவக்க சர் சங்க் சாலக் மோகன் பாகவத் உத்தரவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் சங்க் கடுமையான பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னரே ஆர்.எஸ்.எஸ்ஸை கைகழுகும் வேலை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தேசத்தில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்தத்துவா இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து இது வேகத்தில் நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பொழுதிலும் ராமர்கோவில் நிர்மாணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றும் செய்யவியலாதது ஒரு பிரிவினரை நிராசைக்குள்ளாக்கி ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேறத் தூண்டியது.

அதேவேளையில்,ஆர்.எஸ்.எஸ் வெளியேக்கூறும் போலிக் கோஷங்களான சமூக சேவை, தேசபக்தி ஆகியவற்றை நம்பி சங்க்கில் இணைந்தவர்கள்களுக்கு தற்பொழுது வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பு அங்கலாய்க்க வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல அதன் முன்னணி அமைப்புகளான பா.ஜ.க, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் பங்கினை, மும்பைத்தாக்குதலின் பொழுது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கண்டுபிடித்த பொழுது சங்க்பரிவாரின் பயங்கரவாதத் தொடர்பு வெட்டவெளிச்சமானது.குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களுடனான தொடர்பு தெளிவான பிறகும் ஆர்.எஸ்.எஸ் அதனை மறுத்து வந்தது.

ஆனால் அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த தலைவர்கள் கைதானதும்,குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்ததும் பயங்கரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை மறுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

தங்கள் உறுப்பினர்களின் பயங்கரவாதத் தொடர்பை ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்த சூழலில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க புதிய திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ் தலைமை சோதனையில் இறங்கியுள்ளது.

தேசிய அளவில் ஐம்பதினாயிரம் ஷாகாக்கள் இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய புள்ளிவிபரப்படி 40 ஆயிரத்திற்கு அருகிலாகும். டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் ஷாகாக்கள் செயல்பட்டுவந்தன. தற்பொழுது 1500 ஆக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ விபரம் தெரிவிக்கிறது.

ஆனால் புதிய தலைமுறை இளைஞர்கள் ஷாகாக்களுக்கு வராததன் காரணம் வேலை நெருக்கடி என சப்புக்கட்டுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை"

கருத்துரையிடுக