29 ஆக., 2010

செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை

ஆக29:கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த்.இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.

பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை"

கருத்துரையிடுக