15 ஆக., 2010

காவல்துறை கண்காணிப்பில் அன்வாருச்சேரி: மஃதனி இன்று கைதுச் செய்யப்படுவாரா?

கொல்லம்,ஆக15:கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகா போலீஸ் குற்றவாளியாக சேர்த்துள்ளது.

இந்நிலையில் அவரைக் கைதுச் செய்வதற்கு உதவும் வகையில் மஃதனியின் வசிப்பிடமான அன்வாருச்சேரியை கேரள போலீசார் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இன்று சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பிறகு அவர் கைதுச் செய்யப்படலாம்.இதற்கான முன்னேற்பாடுகளை கேரள போலீஸ் முடித்துவிட்டது.

மஃதனியை கைதுச் செய்யப்போவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அன்வாருச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அப்துல் நாஸர் மஃதனியை கைதுச் செய்யப்போவதைக் கண்டித்து பி.டி.பி தொண்டர்கள் அன்வாருச்சேரியை நோக்கி கண்டனப்பேரணி நடத்தியபொழுது போலீசார் மாராரித்தோட்டம் என்ற இடத்திற்கு அருகில் வைத்து தடை ஏற்படுத்தினர். பின்னர் லத்திசார்ஜ் மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதற்கிடையே நேற்று மதியம் அன்வாருச்சேரிக்கான தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் தடைச்செய்யப்பட்டது. பின்னர் இது இரவில் மீண்டும் வழங்கப்பட்டது. மஃதனிக்கு எதிராக நீதிமன்றம் வெளியிட்ட கைது வாரண்டின் கால அவகாசம் வருகிற செவ்வாய்க்கிழமை முடிவடையும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவல்துறை கண்காணிப்பில் அன்வாருச்சேரி: மஃதனி இன்று கைதுச் செய்யப்படுவாரா?"

கருத்துரையிடுக