15 ஆக., 2010

சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை அரசு பாசிசம் என பாப்புலர் ஃப்ரண்ட்

கோழிக்கோடு,ஆக,15:2004 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்திய தடை மக்கள் இயக்கங்களை அடக்கி ஒடுக்க அரசு பாசிசத்தின் வழியை தேர்ந்தெடுத்துள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரம் என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் நாஸருத்தீன் எழமரம், பொதுச்செயலாளர் அப்துல்ஹமீத் ஆகியோர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள கூறியதாவது: "ஒடுக்கப்பட்ட மக்களை தேசிய நீரோட்டத்தின்பால் வழிநடத்தியதிலும், அரசு நடத்தும் நிகழ்ச்சிகளோடு நின்றுவிடும் சுதந்திர தின கொண்டாட்டத்தை மக்கள் நிகழ்ச்சியாக மாற்றியதிலும் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பு வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து பிரிவினரும் பங்கெடுக்கின்றன.சுதந்திர தின அணிவகுப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் ஆதரவுதான் அரசை நிம்மதியில்லாமல் ஆக்கியுள்ளது.

சுதந்திர அணிவகுப்பு நடத்தியதில் முன்பு ஒருபோதும் சட்டம்-ஒழுங்கு
பாதிப்படையவில்லை. கேரளத்திலும், இதர மாநிலங்களிலும் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர அணிவகுப்பிற்கு ஹிந்துத்துவா சக்திகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர் அணிவகுப்பிற்கு தடை விதித்தன்மூலம் ஹிந்துத்துவா சக்திகளின் விருப்பங்களை அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பிற்கு ஹிந்துத்துவா சக்திகள்தான் காரணம் என்பதை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை ஒட்டியதற்காக பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைதுச்செய்து சிறையிலடைத்ததையும் இத்துடன் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை பாடி அணிவகுப்பு நடத்துவது கூடாது என்பதும், முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் சுதந்திரத்தினத்தை கொண்டாடக் கூடாது என்ற நிலைப்பாடும் இந்த தேசத்தில் எந்த ஒரு முதல்வருக்கும் ஏற்படக்கூடாத ஒன்று. அமைதியாக நடைபெறும் ஒரு சுதந்திர அணிவகுப்பின் மூலம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதிப்படையுமானால் அதற்கு காரணமான உள்துறை அமைச்சர் ராஜினாமாச் செய்துவிட்டு போகட்டும்.

மூவாற்றுப்புழா சம்பவத்தின் பெயரில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்ததும், ரமலான் மாதத்திலும் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை தொந்தரவுச் செய்துவரும் அரசு போலீஸ் ராஜ்ஜியத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்கெதிராக அனைத்து மக்களும் கண்டனங்களை பதிவுச்செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட்
வேண்டிக்கொள்கிறது.

முன்னோர்கள் இரத்தமும், உயிரும் தியாகம் செய்து பெற்ற இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவதற்கான உரிமையைக்கோரும் மக்கள் போராட்டம் வலுவாக தொடரும்." இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநிலத்தலைவர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை அரசு பாசிசம் என பாப்புலர் ஃப்ரண்ட்"

கருத்துரையிடுக